இன்று (02-12-2022) குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் YRC மற்றும் RRC சார்பாக முதல்வரின் அனுமதியுடன் உலக AIDS தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் YRC & RRC ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.கல்யாணி அவர்கள் வரவேற்றார். முதல்வர் (பொ) முனைவர் நா.சரவணாதேவி அவர்கள் தலைமையுரையாற்றினார், IQAC ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.கீர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் மு.இரகுபதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவர் பிரதீப் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இன்று (17.9.2022) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி YRC, RRC, NSS மற்றும் குமாரபாளையம் நகராட்சி இணைந்து"Swachh Bharat" திட்டத்தின் கீழ் நமது கல்லூரி நமது சுகாதாரம் பேணும் விதமாக பேரணி நடத்தப்பட்டது. இதில் 75 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் . இப்பேரணியை காலை 9.30 மணி அளவில் YRC மற்றும் RRC ஒருங்கிணைப்பாளர் மற்றும் வெவ்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இப்பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி குமாரபாளையத்தில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இளைஞர் செஞ்சுருள் சங்கம் சார்பாக இன்று (25.8.2022) காலையில் "KNOW ABOUT YOURSELF"என்ற தலைப்பில் மாணவிகளுக்கும் மற்றும் மதியம்" போதை தடுப்பு விழிப்புணர்வு" என்ற தலைப்பில் மாணவர்களுக்கும் இருவேறு கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் முனைவர் A. ரேணுகா அவர்கள் தலைமை உரை ஆற்றினார் .சிறப்பு விருந்தினராக உளவியல் மற்றும் பாலியல் ஆலோசகர் முனைவர் E.M அசோக் அவர்கள் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
முனைவர் S.கல்யாணி அவர்கள் ஒய் ஆர் சி &ஆர் ஆர் சி ஒருங்கிணைப்பாளர் இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இதில் அனைத்து துறை மாணவ மாணவியர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர் .
இவ்விழாவானது மாணவர்களின் நன்றி உரையோடு இனிதே நிறைவு பெற்றது.