2014 – 15 ஆம் ஆண்டு முதல் நாட்டு நலப் பணித்திட்டம் (அலகு – 1) நம் கல்லூரியில் தொடங்கப்பட்டது. நாட்டு நலப் பணித்திட்டத்தில் முதலாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு மாணாக்கர் 50 பேரும், இரண்டாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு மாணாக்கர் 50 பேரும் என 100 பேர் உள்ளனர். வருடந்தோறும் இரண்டாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு மாணாக்கர் 50 பேர் அருகிலுள்ள கிராமத்தில் சிறப்பு முகாம் அமைத்து, 7 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சேவைகள் புரியப்பட்டு வருகிறது.
இன்று (17.9.2022) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி YRC, RRC, NSS மற்றும் குமாரபாளையம் நகராட்சி இணைந்து"Swachh Bharat" திட்டத்தின் கீழ் நமது கல்லூரி நமது சுகாதாரம் பேணும் விதமாக பேரணி நடத்தப்பட்டது. இதில் 75 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் . இப்பேரணியை காலை 9.30 மணி அளவில் YRC மற்றும் RRC ஒருங்கிணைப்பாளர் மற்றும் வெவ்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இப்பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.